கோத்தகிரியில் சாலையின் குறுக்கே முறிந்து தொங்கிய மரக்கிளை
கோத்தகிரியில் சாலையின் குறுக்கே முறிந்து தொங்கிய மரக்கிளையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், பல கிராமங்களுக்கு மார்கெட் திடல் வழியாக அரசு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சாலையோரத்தில் நின்ற ராட்சத சோலை மரத்தின் கிளை முறிந்து சாலையின் குறுக்கே தொங்கியபடி கிடந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து, மரக்கிளையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மரக்கிளையை அகற்றியதும் போக்குவரத்து சீரானது. மரத்தில் இருந்து கிளை முறிந்து விழுந்த நேரத்தில் அந்த வழியாக எந்தவாகனமும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.