கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்

கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்

Update: 2022-09-30 13:50 GMT

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள தளிஞ்சி கிராமத்திற்கு சென்றுவர கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டிதரவேண்டும் என்று சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதிகளிடம், மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலையை அடுத்துள்ள மானுப்பட்டி ஊராட்சி மலைவாழ் மக்கள் குடியிருப்பு கிராமமான தளிஞ்சியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி என்.முரளிதரன், உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான சப்-கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர். முகாமில் உடுமலை, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் கே.விஜயகுமார், ஆர்.மீனாட்சி, அமராவதி வனச்சரகர் சுரேஷ், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)

எஸ்.மணிகண்டன், வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், ஆண்டியகவுண்டனுர்மற்றும் மானுப்பட்டி ஊராட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள்,

அரசு வக்கீல்கள் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கோரிக்கை

முகாமில் நீதிபதிகளிடம், மலைவாழ்மக்கள் கொடுத்தமனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

தளிஞ்சி கிராமத்தில் குடியிருக்கும் மலைவாழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைபடி கூட்டாற்றின் குறுக்கே உள்ள தரைமட்டபாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் கட்டித்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், நியாயவிலை கடை, காற்றாடி மூலம் மின்சார வசதி செய்து தரவேண்டும்.தகர வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டி தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்