சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவருக்கு 3 ஆண்டுகுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டை அருகே உலகத்தான்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 34). இவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்வதற்காக காட்டுப்பக்கம் தூக்கி சென்றுள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து சிறுமியை மீட்டனர். இதுகுறித்து சிறுமியின் அண்ணன் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் மாரிமுத்துவை கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர். சத்யா நேற்று தீர்ப்பு கூறினார்.
3 ஆண்டுகள் சிறை
இதில் பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதற்காக மாரிமுத்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.