சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-06-19 17:57 GMT

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கலசபாக்கம் தாலுகா மேல்பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 23). இவர் கடந்த 2019-ம் ஆண்டு 14 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கடலாடி போலீசில் புகார் அளித்தாள்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அஜித்குமாரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதன் பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்