சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் திருஞான மகன் தினேஷ் பாபு (வயது 25), சம்பவத்தன்று இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது பற்றி அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளாள். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.