மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளிகொண்டா அருகே நண்பர்களாக பழகியபோது ஒன்றாக எடுத்த புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பி, மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பள்ளிகொண்டா அருகே நண்பர்களாக பழகியபோது ஒன்றாக எடுத்த புகைப்படத்தை உறவினர்களுக்கு அனுப்பி, மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்
பள்ளிகொண்டாவை அடுத்த ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் மாதவன் (வயது 22). சவுண்ட் சர்வீசில் வேலை செய்து வருகின்றார். வெட்டுவானம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும், மாதவனும் நண்பர்களாக கடந்து ஐந்து மாதங்களாக பழகி வந்துள்ளனர். நண்பர்களாக பழகும் போது இருவரும் இணைந்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். திடீரென மாதவன் அந்த மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி மாதவனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மாதவன் நண்பர்களாக இருந்த போது எடுத்த புகைப்படத்தை அவரது உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார்.
போக்சோவில் கைது
தன்னை காதலிக்கவில்லை என்றால் மீதமுள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் போலீசார் மாதவனை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புகைப்படத்தை அனுப்பியதையும், கொலை மிரட்டல் விடுத்ததையும் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தார்.