இன்ஸ்டாகிராமில் சிறுமியை காதலித்த வாலிபர் போக்சோவில் சிக்கினார்
இன்ஸ்டாகிராமில் சிறுமியை காதலித்த வாலிபர் போக்சோவில் சிக்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி இன்ஸ்டா கிராமை பயன்படுத்தி உள்ளார். அந்த சிறுமிக்கு சென்னையை சேர்ந்த 19 வயது வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி உள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த வாலிபர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்து அந்த சிறுமியை சந்தித்து பேசி உள்ளார். அவருடைய வீட்டில் வைத்து சிறுமியிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டாராம்.
இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.