சரக்கு வேன் மோதி வாலிபர் படுகாயம்

சரக்கு வேன் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-08-04 20:13 GMT

ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி கணேசபுரத்தை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 30). இவர் ஆலங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் பாத்திமா நகர் மாஞ்சன் விடுதி பிரிவு ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண்ராஜை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்