செங்கம் அருகே குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

செங்கம் அருகே குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியானான்

Update: 2023-06-25 17:11 GMT

செங்கம்

செங்கம் அருகே குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியானான்

செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் பகுதியை சேர்ந்தவர் கபூர். இவருடைய மகன் ரசூல் (வயது 13) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை யான நேற்று நண்பர்களுடன் சேர்ந்து திருவண்ணாமலை - பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் பெருமுட்டம் செல்லும் சாலையின் அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழே தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ரசூல் தண்ணீரில் மூழ்கி விட்டான். உடனே அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ரசூல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்