மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சாவு

தெருநாய் குரைத்ததால் மாடு மிரண்டு ஓடியதில் படுகாயம் அடைந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2023-10-12 19:15 GMT

வேப்பந்தட்டையை அடுத்துள்ள அய்யனார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுதுரை. இவருடைய மகன் ஹாசன் (வயது 8). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து தனது வயலுக்கு சென்ற ஹாசன் பசு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்துள்ளான். அப்போது மாட்டின் கயிற்றை தனது இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்தபோது எதிரே வந்த நாய் குரைத்ததால் மாடு மிரண்டு ஓடியுள்ளது. இதனால் மாட்டின் கயிற்றை இடுப்பில் சுற்றியிருந்த ஹாசன் தரையில் இழுத்து சென்று படுகாயம் அடைந்தான்.இதையடுத்து அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹாசன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்