தென்காசியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

தென்காசி கோவிலில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

Update: 2022-12-06 18:45 GMT

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி - அம்பாள் சப்பரத்தில் சுவாமி சன்னதி பஜாருக்கு எடுத்துவரப்பட்டது. அங்கு முதலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பின்னர் சுவாமி - அம்பாள் அம்மன் சன்னதி பஜாருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இரு இடங்களிலும் மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்