வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-08-13 14:42 GMT

கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வெடிகுண்டு தடுப்பு

75-வது சுதந்திர தினத்தையொட்டி நாடுமுழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை ரெயில் நிலை யத்தில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு ஒத்திகையை நேற்று காலை 11.25 மணிக்கு நடத்தினர். அதன்படி, ஒரு பயணியின் சூட்கேசில் வெடிகுண்டு இருப்பதாக ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைக்கிறது.

சோதனை

உடனே ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் பிரமோத் நாயர், இன்ஸ்பெக்டர் கிரீஷ் மற்றும் வெடிகுண்டு தடுப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து செல்கிறார்கள். அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு எங்கு உள்ளது என்று சோதனை நடத்தினார்கள்.

இதையடுத்து தீயணைப்புத்துறையினர் மற்றும் சி.ஆர்.பி.எப், கோவை நகர போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், ரெயில்நிலையத்துக்கு வந்த பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத் துகிறார்கள்.

நாய் குரைத்தது

இதைத்தொடர்ந்து ரெயில்வே படை மோப்பநாய் மூலம் சோதிக்கப்படுகிறது. அதில் ரெயில்நிலைய முன்புற வளாகத்தில் வெடிகுண்டு சூட்கேஸ் இருப்பதை மோப்ப சக்தியால் உணர்ந்த நாய் குரைக்கிறது.

உடனே அங்கு வெடிகுண்டு இருப்பதை உறுதி செய்ததும், பாம் ஷூட் என்ற கவச ஆடை அணிந்த போலீஸ்காரர் அனீஷ் விரைந்து செயல்பட்டு சூட்கேசை திறந்து வெடிகுண்டுடன் இணைக்கப்பட்டு இருந்த வயரை வெட்டி அதை செயல்இழக்க செய்தார். இதனால் அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைகிறார்கள். ஒத்திகை நிகழ்ச்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

27 நிமிட ஒத்திகை

இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கிரீஷ் கூறும் போது, நேற்றுகாலை 11.25 மணிக்கு பேட்டரி பொருத்திய சிறிய வெடிகுண்டை சூட்கேசில் வைத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்டு 27 நிமிடங்களில் அதாவது 11.52 மணிக்குள் வெடிகுண்டு செயல் இழக்க செய்யப்பட்டது என்றார்.

ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு ஒத்திகை நடந்தது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாதுகாப்புக்காக நடத்தப்பட்டதை அறிந்து அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்