கோத்தகிரி மார்க்கெட்டில் உலா வந்த காட்டெருமை வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி மார்க்கெட்டில் உலா வந்த காட்டெருமையால் வியாபாரிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2022-07-05 12:13 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் மார்க்கெட் திடல் பகுதியில் இருந்து காட்டெருமை ஒன்று மார்கெட்டிற்குள் புகுந்து புயல் நிவாரண கூடம் சாலை வழியாக ஹாயாக நடந்துச் சென்றது. அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. எனினும் காட்டெருமையை வெகு அருகில் கண்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதே போல நகரின் முக்கிய சாலைகளிலும் கடந்த சில தினங்களாக காட்டெருமைகள் உலா வந்த வண்ணம் உள்ளன. எனவே காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்