சாலைகளை சீரமைக்க கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்

கூடலூரில் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி பிச்சை எடுக்கும் போராட்டம் என்று நாம் தமிழர் கட்சியினர் அறிவிப்பு பலகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-19 22:15 GMT

கூடலூர்

கூடலூர் தொரப்பள்ளி முதல் மாக்கமூலா, மார்தோமா நகர், புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் உள்பட நகருக்குள் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் ஆம்புலன்ஸ் வாகனம் இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலைகளை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், சீரமைக்கப்படாததால் சாலை மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், கூடலூர் நகரின் முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் குண்டும், குழியுமான சாலைகளை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, பொதுமக்களிடம் பிச்சை எடுத்து சாலை சீரமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்