கோத்தகிரி அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்ற கரடியால் பரபரப்பு

கோத்தகிரி அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்ற கரடியால் பரபரப்பு

Update: 2023-02-02 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன் தினம் அதிகாலை கோத்தகிரி அருகே மூணுரோடு பகுதியில் உள்ள ஆனந்த்ராமு என்பவரது வீட்டில் உள்ள அறை ஒன்றில் ஜன்னலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. திருடர்கள் யாராவது உடைக்க முயற்சி செய்கிறார்கள் என நினைத்து வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். நீண்ட நேரம் சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததால் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது கரடி ஒன்று ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து, தீ பந்தங்களை ஏந்தி கரடியை விரட்டினர். இதனால் அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல அரவேனு அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள சாலையில் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரத்தில் கரடிகள் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ேமேலும் குடியிருப்புகள் உள்ள பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருகின்றன. இவை மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளதால், கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்