பொருட்களை சேதப்படுத்திய கரடி

வீட்டின் கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்திய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2023-06-20 22:15 GMT

குன்னூர்

குன்னூரில் கடந்த சில நாட்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குன்னூர் அருகே சேலாஸ் கக்காச்சி பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் என்பவரது வீடு பூட்டி இருந்தது. அப்போது ஊருக்குள் உலா வந்த கரடி, அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. பின்னர் அங்கிருந்த அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து கரடி புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, கரடிைய கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்