சாலையில் உலா வந்த கரடி;வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Update: 2023-08-03 18:45 GMT

கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வனப்பகுதியையொட்டி உள்ளதால் சாலை, குடியிருப்பு பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவைகள் வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதி, சாலைகளில் உலா வநத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை கோத்தகிரி அரவேனுவில் இருந்து கேசலாடா கிராமத்திற்கு செல்லும் சாலையின் நடுவே கரடி ஒன்று உலா வந்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். பின்னர் சிறிதுநேரம் கழித்து கரடி, தேயிலைத் தோட்டதிற்குள் சென்று மறைந்தது.

இதையடுத்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், அரவேனு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால் அவைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்