சாலையில் உலா வந்த கரடி

கோத்தகிரியில் நள்ளிரவில் சாலையில் உலா வந்த கரடியால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Update: 2023-04-23 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் கரடிகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வந்த வண்ணம் உள்ளன. அவை தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோத்தகிரியில் இருந்து கொணவக்கரை செல்லும் சாலையின் குறுக்கே கரடி உலா வந்தது. அதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர்.

அதே நேரத்தில் அதே சாலையில் முள்ளம்பன்றியும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் ஒலிப்பானை ஒலிக்க செய்து கரடி, முள்ளம் பன்றியை அங்கிருந்து விரட்டினர். தொடர்ந்து அவை அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்