சென்னையில் பேட்டரியில் இயங்கும் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!
சென்னையில் தனியார் பஸ் மோதியதில் பேட்டரியில் இயங்கும் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னையில் செம்பரம்பாக்கம் அருகே நெடுஞ்சாலையில் பேட்டரியில் இயங்கும் ஆம்னி பஸ் மீது பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. பஸ் மோதியதில் ஆம்னி பஸ்சின் பேட்டரி சர்க்யூட் பகுதியில் தீப்பிடித்ததால் ஆம்னி பஸ் எரிந்தது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்ததும், பஸ்சில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பூந்தமல்லி-ஶ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.