மீனவர் வலையில் சிக்கிய 90 கிலோ ராட்சத திருக்கை மீன்
மீனவர் வலையில் 90 கிலோ ராட்சத திருக்கை மீன் சிக்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இவர் வலையில் சுமார் 90 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது. இதையடுத்து அந்த மீனை அவர் கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அந்த மீனை மீன்மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். இந்த மீன் ரூ.7 ஆயிரத்திற்கு ஏலம் போனது.