வீடு புகுந்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணிடம்...
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் வேளாங்கண்ணி மேற்கு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி ரோணிக்கம் (வயது 51).
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்த படி படுத்து தூங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் மர்மநபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து ரோணிக்கம் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது கண் விழித்த ரோணிக்கம் திருடன்... திருடன்.. என சத்்தம் போட்டார். அதற்குள் மர்மநபர் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
9 பவுன் சங்கலி பறிப்பு
இதுகுறித்து ரோணிக்கம் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன்போில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து 9 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.