9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
ஆம்பூர் அருகே 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.