மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி
பாவூர்சத்திரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழந்தாள்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலியானாள்.
மர்ம காய்ச்சல்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் வெள்ளை பனையேறிப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்முருகன். இவரது மகள் ஸ்ரீபொன்மகரம் (வயது 7). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இவளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தாள்.
சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாள்.
இது குறித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.