பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி திருட்டு

துறையூரில் பஸ் ஏறமுயன்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-18 19:58 GMT

துறையூரில் பஸ் ஏறமுயன்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கிலி திருட்டு

துறையூறை அடுத்த பி.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பொண்ணு. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை மீண்டும் பஸ்சில் துறையூர் வந்தார். பின்னர் அவர் பி.மேட்டூர் செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது, அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கப்பொண்ணுவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர்.பஸ்சில் ஏறிய பின்னர் தற்செயலாக தனது கழுத்தை பார்த்தபோது, சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சக பயணிகளிடம் விசாரித்தும் தங்க சங்கிலி கிடைக்கவில்லை. இதனையடுத்து பஸ்சை துறையூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிக்க பயணிகள் வலியுறுத்தினர்.

வலைவீச்சு

பின்னர் பஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒவ்வொரு பயணியிடம் விசாரித்தும் நகை கிடைக்கவில்லை. இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, துறையூர் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை. அதனை சரி செய்ய வேண்டும். துறையூர் பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்