19 வயது பெண்ணை கர்ப்பிணி ஆக்கிய 60 வயது முதியவர் கைது..!

சோழவந்தான் அருகே 19 வயது பெண்ணை கர்ப்பிணி ஆக்கிய 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-29 14:52 GMT

மதுரை:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள 19 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்படவே மருத்துவ பரிசோதனை செய்த போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது சம்பந்தமாக அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா தேவி வழக்குப்பதிவு செய்து அறுபது வயது முதியவர் ராசுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்