எலி பேஸ்ட்டை தின்ற 6 வயது சிறுவன் சாவு

கொல்லிமலையில் விளையாட்டாக எலிபேஸ்ட்டை தின்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2022-11-20 18:51 GMT

சேந்தமங்கலம்

1-ம் வகுப்பு மாணவன்

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் அரியூர் நாடு ஊராட்சி போடம்பில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மிதுலா தேவி (25). இவர்களுடைய 6 வயது மகன் வினித். இவன்அங்குள்ள பூங்குளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி குழந்தைகளுடன் வினித் விளையாடி கொண்டிருந்தான். அப்போது விளையாட்டாக வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சிறுவன் எடுத்து தின்று உள்ளான். இதில் சிறுவன் மயங்கி விழுந்தான். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வினித்தை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பெற்று வந்த வினித் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லிமலையில் விளையாட்டாக எலி பேஸ்ட்டை தின்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்