பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு

மண்டையூர் அருகே பஸ்சில் பயணம் செய்த மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-21 17:51 GMT

5 பவுன் சங்கிலி திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பாலாயி (வயது 75). இவர் சம்பவத்தன்று காலை கீரனூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி தனது சொந்த ஊரான மண்டையூருக்கு சென்றுள்ளார்.

பஸ்சில் இருந்து இறங்கிய பாலாயி வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாயி இதுகுறித்து மண்டையூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

அதன்பேரில் மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிசென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்