பெண்ணின் கைப்பையில் 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு

பெண்ணின் கைப்பையில் 3 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது.

Update: 2022-07-26 18:50 GMT

புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (37). இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே நின்ற போது அவரது கைப்பையில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் மல்லிகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்