17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தது அம்பலம்

ஆரல்வாய்மொழியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுெதாடர்பாக 34 வயது வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-11-01 18:45 GMT

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுெதாடர்பாக 34 வயது வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

17 வயது சிறுமி கர்ப்பம்

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அவருக்கு சம்பவத்தன்று காய்ச்சலாக இருந்தது.

உடனே சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பெண் டாக்டர் பரிசோதித்த போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

உடனே அந்த பெண் டாக்டர் சிறுமியிடம் அது குறித்து விசாரித்தார். அப்போது சிறுமிக்கும் செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஆதி கண்ணன் (வயது 34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது தெரியவந்தது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரே வீட்டில் அவர்கள் குடும்பமாக வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பானு தலைமையில் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

வாலிபர் மீது வழக்கு

அப்போது சிறுமியை ஆதி கண்ணன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானது தெரியவந்ததுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆதி கண்ணன் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்