16 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
கூடலூரில் 16 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
கூடலூர்,
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அள்ளூர்வயல் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மலைப்பாம்பு ஒன்று வந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெய்வமலை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். அதன் பின்னரே தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆக்ரோஷத்துடன் இருந்தது. பிடிக்கப்பட்ட பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது என்றனர்.