12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

மார்த்தாண்டம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-28 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

மார்த்தாண்டம் அருகே உள்ள மாலன்விளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரசல்ராஜ் என்ற ரசல் (வயது 60). சம்பவத்தன்று இவர் சாலையில் நடந்து சென்ற 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தனது வீட்டின் அருகில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ரசல்ராஜின் கொடூர செயலை உறவினர் ஒருவரிடம் கூறி சிறுமி கதறி அழுதார். உடனே ஆத்திரம் அடைந்த உறவினர், ரசல்ராஜிடம் சென்று சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை பற்றி கேட்டுள்ளார். அப்போது அவரையும் ரசல்ராஜ் தகாத வார்த்தையால் பேசி மிரட்டியுள்ளார்.

ஆட்டோ டிரைவர் கைது

இதுகுறித்து சிறுமியின் உறவினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசல்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்