108 வயது முதியவர் சாவு

மயிலாடுதுறையில் 108 வயது முதியவர் சாவு மனைவி இறந்த 2 நாட்களில் உயிரிழந்த சோகம்

Update: 2023-02-19 18:45 GMT

மயிலாடுதுறை திருவிழந்தூர் குட்டக்குள தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் 1915-ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு வயது 108. இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது85). இவர் கடந்த 16-ந் தேதி இரவு உடல் நலக்குறைவால் இறந்தார். மனைவி இறந்த சோகத்தில் கடந்த 2 நாட்களாக படுத்த படுக்கையாக இருந்த கண்ணன் சரியாக சாப்பிடவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கண்ணனும் இறந்தார். 1953-ம் ஆண்டு கண்ணன்-பழனியம்மாளுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் என்று 6 குழந்தைகள். 15 பேரக்குழந்தைகள், 8 கொள்ளு பேரன்கள் உள்ளனர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த கண்ணன்- பழனியம்மாள் தம்பதி ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டி வாழ்ந்து வந்து வந்ததாகவும், இருவருக்கும் மன வருத்தங்கள் ஏற்பட்டதை பார்த்ததே இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர். மனைவி இறந்த துக்கத்தில் 2 நாட்களில் 108 வயது முதியவரும் இறந்தது மயிலாடுதுறை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்