வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த 100 வயது மூதாட்டி மாடு முட்டி சாவு
வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த 100 வயது மூதாட்டி மாடு முட்டி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வடமாவந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், விவசாயி. இவரது தாயார் எல்லம்மாள் (வயது 100).
தள்ளாத வயதிலும் எல்லம்மாள் வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இவர் வீட்டின் முன்பு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.
மாடு முட்டி சாவு
அப்போது அந்த வழியாக எருதுவிடும் விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த காளை ஒன்று திடீரென மிரண்டு ஓடியதில் வீட்டு முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்த எல்லம்மாள் மீது முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.