மண்எண்ணெய் குடித்த 10 மாத குழந்தை சாவு
திண்டிவனம் பகுதியில் மண்எண்ணெய் குடித்த 10 மாத குழந்தை சாவு
திண்டிவனம்
திண்டிவனம் ரோசணை போலன் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ். இவரது 10 மாத குழந்தை லாஸ்லியா சம்பவத்தன்று வீட்டிலில் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்துவிட்டாள். சில நிமிடங்களில் அவளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லாஸ்லியாவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள்பரிதாபமாக இறந்தாள். இது குறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.