தீக்காயமடைந்த 1 வயது குழந்தை சாவு
தீக்காயமடைந்த 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் யஸ்பி (வயது 40). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் குடும்பத்துடன் இங்கு வசித்து வருகிறார். இவரது 1 வயது குழந்தையான சிவாங்கி லட்சுமி சம்பவத்தன்று வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பில் உள்ள குழாயை பிடித்து இழுத்துள்ளது. அப்போது அடுப்பு விழுந்து, வெந்நீர் அந்த குழந்தை மீது கொட்டியது. இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த குழந்தை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிவாங்கி லட்சுமி இறந்தது. இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.