மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை கட்டுப்படுத்தவேண்டி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 97 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1,287 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்ட விரோத மது விற்பனை குறித்து 04324-296299 என்ற தொலை பேசி எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.