பிரமாண பத்திர உறுதி மொழியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடிக்கு 94 நாட்கள் சிறை
பிரமாண பத்திர உறுதி மொழியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட ரவுடிக்கு 94 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் கோபி உத்தரவிட்டார்.
சென்னை அயனாவரம் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் ஹேமநாதன் (வயது 32). இவர் மீது அயனாவரம், ஐ.சி.எப். போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே ஹேமநாதன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி அயனாவரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரை சந்தித்து தான் திருந்தி வாழ்வதாகவும், இனி குற்றச் செயலில் ஈடுபட மாட்டேன் எனவும் பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி ஹேமநாதன் அடிதடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரமாண பத்திர உறுதி மொழியை மீறி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்ட ஹேமநாதனை மேலும் 94 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் கோபி உத்தரவிட்டார்.