92 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

92 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-03 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை சமத்துவபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் முட்புதருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 68 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிநேகவல்லிபுரம் மணிகண்டன்(வயது 29), துரைராஜ்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தொண்டியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பிர்தவுஷ்கான் என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட 24 கிலோ புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்