திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2022-06-20 14:38 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியானது. இதில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் வெளியானது.

தேர்ச்சி விவரத்தை மாணவ-மாணவிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. அத்துடன் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மாணவ-மாணவிகள் பலர் தங்கள் செல்போன்களில் இணையதளத்தை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்துகொண்டனர்.

இதேபோல் பள்ளிகளுக்கு சென்று தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் தெரிந்துகொண்டனர். மேலும் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவு விவரங்கள் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது.

90 சதவீதம் தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை பொறுத்தவரை 9 ஆயிரத்து 981 மாணவர்கள், 10 ஆயிரத்து 669 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 650 பேர் எழுதினர். இதில் 8 ஆயிரத்து 509 மாணவர்களும், 10 ஆயிரத்து 76 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 585 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இது 90 சதவீத தேர்ச்சி விகிதம் ஆகும். அதேநேரம் 1,472 மாணவர்கள், 593 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 65 பேர் தேர்வில் தோல்வியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்