பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

விழுப்புரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-17 18:45 GMT

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பம்பை ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக விழுப்புரம் அருகே சோழகனூரை சேர்ந்த சிவக்குமார் (வயது 35), சோழம்பூண்டியை சேர்ந்த ராஜேஷ் (25), செல்வம் (37), சதீஷ்குமார் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ஏ.கூடலூர் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அதே கிராமத்தை சேர்ந்த பர்ணா (50), மகேந்திரன் (37) ஆகியோரையும், அருளவாடி பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (53), குமார் (59), பூங்காவனம் (66) ஆகியோரையும் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்