பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீத்தான் விடுதி குளம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாண்டியன் (வயது 37), முருகுபாண்டியன் (33), அபுதாகீர் (52), செல்வம் (51), சிவக்குமார் (38), செந்தில் (31), முருகுபாண்டியன் (45) கணேசமூர்த்தி (38) ஆனந்தபிரபு (38) ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.1,500 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.