கார் கவிழ்ந்து 9 பேர் காயம்

சாலையின் குறுக்கே மாடு வந்ததால் கார் கவிழ்ந்து 9 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-08-13 19:45 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் தீபக் (வயது 34). இவரும், அவரது குடும்பத்தை சேர்ந்த சமினியா (33), ஹேமநாதன் (60), வர்சலா (67), தீனா (55), லட்சுமி (32) உள்பட 8 பேரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பெங்களூருவில் இருந்து காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். காரை தீபக் ஓட்டினார்.

வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் அந்த கார் வந்தது. அப்போது சாலையின் குறுக்கே எருமை மாடு ஒன்று சென்றது. இதனால் அந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க தீபக் திடீர் 'பிரேக்' போட்டு காரை நிறுத்த முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த தீபக் உள்பட 9 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்