சரக்கு ஆட்ேடா மீது கார் மோதல் 9 பேர் படுகாயம்

திருவையாறு அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதியதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-10-26 20:48 GMT

திருவையாறு அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதியதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

வளைகாப்பு நிகழ்ச்சி

திருவையாறு அருகே பூண்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்- சுபாஷினி ஆகியோரது மகள் சண்முகப்பிரியா. இவரை தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

நேற்று சண்முகப்பிரியாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூண்டியை சேர்ந்த சண்முகப்பிரியாவின் உறவினர்கள் ரவி, அவரது மனைவி இந்திராணி, பிரசாந்த், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் சரக்கு ஆட்டோவில் வளைகாப்புக்கு சென்றுவிட்டு பின்னர் பூண்டி மாதா ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

9 பேர் படுகாயம்

அப்போது திருவையாறு அருகே கண்டியூர் சுற்றுக்குளம் அருகே வந்த போது, திருவையாறிலிருந்து தஞ்சைக்கு வந்த கார் எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ மீது மோதியது. காரில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் வந்தனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த திருவையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருவையாறு- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்