தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது

கூடங்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-10 21:07 GMT

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி

கூடங்குளத்தை சேர்ந்தவர் ஜெபின் (வயது 23). கூலித்தொழிலாளியான இவர் ராதாபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரிடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு வாங்கினார். இதில் ரூ.4 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து உள்ளார். மீதம் உள்ள பணத்துக்கு ஜெபின் தன்னுடைய மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுப்பதில் கால தாமதம் படுத்தி வந்தார்.

இந்த நிலையில் மணிகண்டனின் நண்பரான கூடங்குளத்தை சேர்ந்த லிங்கம் (20) என்பவர் ஜெபினை ராதாபுரம் வரைக்கு சென்றுவருவோம் என்று அழைத்தார். தமக்கு தெரிந்தவர் தானே என்று ஜெபின், லிங்கத்துடன் சென்றார்.

9 பேர் கைது

கூடங்குளம் ஊருக்கு அருகே சென்ற போது அங்கு மணிகண்டன் தனது நண்பர்களான ராதாபுரத்தை சேர்ந்த சுடலையாண்டி (20), வடக்கன்குளத்தை சோ்ந்த முத்து (21), பெருங்குடியைச் ேசர்ந்த சுபிலேஸ்வரன் (22), சுரேந்தர் (21) மற்றும் 3 சிறுவர்கள் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று ெஜபினை வழிமறித்து மீதம் உள்ள பணத்தை கேட்டு மிரட்டினர். லிங்கமும் சோ்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஜெபினின் மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை கொண்டு வர வலியுறுத்தினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெபின் மனைவி இதுகுறித்து உடனடியாக கூடங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஜெபினை மீட்டு, மணிகண்டன் உள்பட 9 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்