அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 7 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 309 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.