பேக்கரியை சூறையாடிய 9 பேர் கைது

அன்னூரில் கடனுக்கு டீ தராத ஆத்திரத்தில் பேக்கரியை சூறையாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-31 20:30 GMT

அன்னூர்

அன்னூரில் கடனுக்கு டீ தராத ஆத்திரத்தில் பேக்கரியை சூறையாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பேக்கரி சூறை

கோவை அன்னூர்-சத்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம் (வயது 40). இவர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பேக்கரியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை பேக்கரிக்கு அன்னூர் வடக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (29), ரஞ்சித்குமார் (28), பிரவீன்குமார் (26), கார்த்தி (40), ராஜசேகர், செந்தில்குமார் (37), கோகுல்ராஜ் (26), சபரி (22), வீராசாமி (32) ஆகிய 9 பேர் வந்தனர்.

அவர்கள் பேக்கரியில் டீ, சிகரெட், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டுவிட்டு, கடன் கூறியுள்ளனர். அப்போது பேக்கரி காசாளரான அப்துல்ரஹீம் ஏற்கனவே உள்ளது பெயரில் அதிக கடன் உள்ளதால் பணம் தரும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 9 பேரும் பேக்கரி இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிகிறது.

9 பேர் கைது

இதுகுறித்து அப்துல்ரஹீம் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து பேக்கரியை சூறையாடிய பிரபாகரன், ரஞ்சித்குமார், பிரவீன்குமார், கார்த்தி, ராஜசேகர், செந்தில்குமார், கோகுல்ராஜ், சபரி, வீராசாமி ஆகிய 9 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்