ரூ.9¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

கீழ்வேளூர் அருகே மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.9¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வழங்கினார்.

Update: 2023-07-13 18:45 GMT

வேளாங்கண்ணி:


கீழ்வேளூர் அருகே மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.9¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வழங்கினார்.

முகாம்

கீழ்வேளூர் அருகே இறையான்குடி ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜமுனா ராணி தலைமை தாங்கினார்.

கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

நலத்திட்ட உதவிகள்

இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்பட 45 பேருக்கு ரூ.9 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் நாகை மாலி எம்.எல்.ஏ., சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தி, ஆரோக்கியமேரி, வெற்றிச்செல்வம், ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சேகர், வருவாய் ஆய்வாளர் சக்தி மனோகர், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்