104 மாணவர்களுக்கு ரூ.9 கோடி கல்விக்கடன்- கலெக்டர் தகவல்

104 மாணவர்களுக்கு ரூ.9 கோடியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2023-09-08 19:27 GMT

காரைக்குடி

104 மாணவர்களுக்கு ரூ.9 கோடியில் கல்விக்கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

சிறப்பு கல்வி கடன் முகாம்

காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடந்தது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலையில், மாணவர்களுக்கு கல்வி கடன் ஆணைகளை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத், வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் மாவட்ட அளவில் 2 சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, கடந்த 5-ந் தேதி சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமின் மூலம் 39 மாணவர்களுக்கு ரூ.2.57 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டது, அன்றைய தினம் சிவகங்கை முகாமில் கலந்து கொண்ட 37 மாணவர்களுக்கு ரூ1.75 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்தனர்.

104 மாணவர்கள்

தற்போது காரைக்குடியில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமின் மூலம் 65 மாணவர்களுக்கு ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடன் ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. முகாமில் கலந்து கொண்ட 34 மாணவர்கள் ரூ. 1.73 கோடி மதிப்பீட்டில் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஆக மொத்தம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து, 104 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சங்கரகிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் மற்றும் காரைக்குடி சுற்ற ் வட்டாரத்தில் இயங்கும் 21 வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்