மணல் கடத்தி வந்த 9 மாட்டுவண்டிகள் பறிமுதல்
செய்யாறு அருகே மணல் கடத்தி வந்த 9 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்யாறு
செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் உத்தரவின் பேரில், செய்யாறு போலீசார் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் செய்யாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
போலீசார் விசாரணையில் தப்பியோடியவர்கள் பெருங்களத்தூர், பெரியவேளியநல்லூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து 9 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.