சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-28 16:19 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டது.

சூதாட்டம்

பொள்ளாச்சி அருகே பணிக்கம்பட்டி வாய்க்கால் மேட்டி உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் மற்றும் போலீசார் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது.

இதற்கிடையில் போலீசாரை பார்த்ததும் சூதாட்ட கும்பல் தப்பி ஓடியது. பின்னர் போலீசார் அவர்களை நாலாபுறமும் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

9 பேர் கைது

விசாரணையில் தொப்பம்பட்டியை சேர்ந்த காளிமுத்து (வயது 42), குமரன் நகர் விவேகானந்தன் (47), கப்பளாங்கரை செல்வகுமார் (50), சிவக்குமார் (45), கேரளா மாநிலம் பாலக்காடு சித்தூரை சேர்ந்த சிகாபூதீன் (43), வசியாபுரம் அஜித்குமார் (26), நெகமம் ஜலீல் (45), நாச்சிமுத்து (55), ஜமீன்ஊத்துக்குளி பாலசுப்பிரமணியம் (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கைதானவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 16 ஆயிரத்து 790 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்